தடையின்றிய மின்விநியோகத்திற்கு 10 மின்பிறப்பாக்கிகள்!
Thursday, March 31st, 2016
மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கு தம்மிடமுள்ள 10 மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்காக கொழும்பின் 10 நகரங்களில் மின்பிறப்பாக்கிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன குறிப்பிட்டார்.
2.5 கிலோ வோட் மின்வலு கொண்ட 2 மின்பிறப்பாக்கிகளும், 11 கிலோ வோட் மின்வலு கொண்ட 8 மின்பிறப்பாக்கிகளும் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அவை தேசிய கட்டமைப்புகளுடன் இணைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில், நாட்டில் பெய்த மழையால் நீர் மின் உற்பத்தி 40 வீதமாக அதிகரித்துள்ளது. நுரைச்சோலை மற்றும் கெரவலப்பிட்டி ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி நிலையங்களிலும், தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யபடுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
Related posts:
கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் 2016
இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறிய விவகாரம் - ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக...
பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள உயர்தர மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா - ஜனாதிபதி நிதியம் அத...
|
|
|


