தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை – அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு!

Saturday, November 6th, 2021

பொது இடங்களுக்கு மக்கள் செல்லுகையில் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து அடுத்த கொவிட் பணிக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கொவிட் 19 செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுமார் 6 வீதமான மக்களுக்கு இன்னும் இரண்டாவது டோஸ் வழங்கப்படாத நிலையில் இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதல்ல எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுவதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் தடுப்பூசி அட்டையை பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கனேடிய தூதுவருடனான சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: