தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் – பொலிஸ் திணைக்களம் விசேட கேரிக்கை!
Thursday, September 9th, 2021
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் சிலர் சமூக இடைவெளியை கவனத்திற்கொள்ளாது நடந்துகொள்கிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
மேலும் சமூக இடைவெளி மற்றும் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மக்களுக்கிடையே கொவிட் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2017இன் பொருளாதார வளர்ச்சி 6.37சதவீதமாக அதிகரிக்கலாம் - மத்திய வங்கி!
மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் – கல்வி அமைச்சர் ...
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு - இல...
|
|
|


