தடம்புரண்டது குப்பை அகற்றும் உழவியந்திரம் – யாழ் ஆரியகுளம் பகுதியில் சம்பவம்!

Monday, June 18th, 2018

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான குப்பை ஏற்றி அகற்றும் உழவியந்திரம் தடம்புரண்டதனால் குறித்த வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த அழுக்ககள் நிறைந்த குப்பைகள் ஆரியகுளம் வீதியில் சிதறுண்டு காணப்படுவதால் குறித்த வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

யாழ். ஆரியகுளம் நாகவிகாரைக்கு அருகாமையில் இன்று மதியம் குப்பை சேகரித்துக்கொண்டிருந்த குறித்த குப்பை அகற்றும் உழவியந்திரம் சாரதியின் அசமந்தத்தால் தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாநகரை பசுமையாக்குவோம் என கூறிவரும் யாழ் மாநகரசபையின் ஆட்சியாளர்கள் அதற்குரிய செயற்பாடுகள் எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் யாழ் நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துவருகின்றனர்.

அத்துடன் குறித்த குப்பை பிரச்சினையை கட்டப்படுத்தும் முயற்சிகளை யாழ் மாநகரசபை கவனத்தில் கொள்வதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

01

Related posts:

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு: மீள் பரிசீலனை செய்யுமாறும் இலங்கை ஆசிரியர் சேவ...
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங...
பெற்றோர்களால் கைவிடும் குழந்தைகளுக்கான “குழந்தைப் பெட்டி” அரசினால் அறிமுகப்படுத்த தீர்மானம்!