தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்!

Wednesday, September 28th, 2016

சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு இன்று (28) கொழும்பில் நடைபெறுகின்றது.

தகவல்களை அறிந்துகொள்ளல் மற்றும் ஊடக மறுசீரமைப்பு என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. தகவல்களை அறிந்துகொள்ளல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை, பரிமாற்றிக் கொள்ளல் மற்றும் நாட்டிற்குள் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் முன்னிலைப்படுத்தி நம்பிக்கையான அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான வெகுசன ஊடகத்தை மறுசீரமைப்பது தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடலை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்காக தெற்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய மற்றும் கனடா நாடுகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

591656690Rit

Related posts:

விழா மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு இலங்கை ...
சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் - அங்க...
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் - பாரதப் பிரதமர் மோடி நிதி அமைச்சர் பசில் ரஜபக்சவிடம் ...