தகவல் அறியும் உரிமை ஆரம்பம்!

Friday, September 21st, 2018

எதிர்வரும் 28ஆம் திகதி தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினமாகும். இதனை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனம் செய்துள்ளது.

தகவல் வாரம் இன்று(21) ஆரம்பமாகிறது.

“தகவலுக்கான உரிமையின் மூலம் அரச சேவையின் தனிச்சிறப்பு” என்பது இம்முறை தொனிப்பொருளாகும்.

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சு பாரிய பணிகளை நிறைவேற்றியுள்ளது.

இன்று ஆரம்பமாகும் தகவல் வாரத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உரிய பயனை அடைவது பற்றி; மக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்துள்ளார்

Related posts: