ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெற்செய்கை – விவசாய அமைச்சு அதிரடி நடவடிக்கை!
Monday, May 20th, 2024
இவ்வருடம் 15 மாவட்டங்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, நுரவஎலியா, மாத்தளை, திருகோணமலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இம்முறை நெற்செய்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட உள்ளன.
தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளின் பொது சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ஆளில்லா விமானத்தை வழங்க விவசாய தொழில்நுட்ப சபை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் காவிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இயற்கை அனர்த்தம் - சில வாரங்களுக்கு முன்னரே எச்சரித்த சர்வதேசம்!
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21 ஆம் திகதிவரை இடம்பெறாது - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
|
|
|


