டொலரை வழங்கத் தேவையான ரூபாவை வழங்குமாறு மத்திய வங்கி எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை!

எரிபொருள் இறக்குமதிக்குத் தேவைப்படும் டொலர்களை வழங்கத் தேவையான ரூபாவை வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எழுத்து மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் டொலர் பற்றாக்குறை, ரூபாவின் பெறுமதி இழப்பு எரிபொருள் இறக்குமதிக்கு இடையூறாக அமையும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித் துள்ளார்.
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் எரிபொருளுக்கான வரியைக் குறைக்குமாறு நிதி அமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் இழப்பீட்டு!
உலகில் மிக அழகான 23 நாடுகளில் இலங்கை !
மைத்தி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீ...
|
|