டெனிஷ்வரனை பதவி நீக்கியது சட்ட முரணானது – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Friday, June 29th, 2018
வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஷ்வரனை வடக்கு முதல்வர் அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரனானது என நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை அவருடைய அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் உடனடியாக அவருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதி மன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
முதலமைச்சருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள் முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து டெனிஸ்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணைகளை முன்னெடுத்த நீதிமன்றம்; இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்து இன்று தீர்ப்பினை அறிவித்துள்ளது.
இதன்பிகாரம் முன்னால் அமைச்சர் டெனிஸ்வரனை அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியது செல்லுபடி அற்றது என அறிவித்துள்ளது. அவர் வகித்த அமைச்சு பதவியை தற்போது வகிக்கும் அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை உத்தரவையும் நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.
குறித்த தடை உத்தரவையும் தீர்ப்பின் நகலையும் வட மாகாண ஆளுநர் மற்றும் முதல்வருக்கும் அனுப்பி வைக்குமாறும் நீதி மன்றம் உத்தரவு இட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Related posts:
|
|
|


