டெங்கு நோய் – இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு

Monday, June 19th, 2017

இன்று திங்கட்கிழமை முதல் டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்படுகிறது என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் ரூபா 750 – 800 கட்டணம் 250/= ரூபா வரையில் குறைப்பதற்கும், முழுஅளவிலான  இரத்த பரிசோதனைக்காக (Full blood count) அறவிடப்படும்  ரூபா 3000 – 4000 கட்டணம்  ரூபா 1000/= ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தனியார் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் இந்தக் கட்டணத்தை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்மகா நாட்டில் இது தொடர்பாக அமைச்சர் மேல் தெரிவிக்கையில் ,இது தொடர்பில் அனைத்து தனியார் வைத்தியசாலைகளின் இரசாயனக் கூடங்கள் மற்றும் வைத்திய நிறுவனங்களை சேர்ந்தோருக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார

Related posts: