டெங்கு நோயின் தாக்கம் பாடசாலை மாணவர்களுக்கே அதிகம்!

நாட்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 சதவீதமானோர் பாடசாலை மாணவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்புத் தொடர்பான நடவடிக்கைக் குழுவின் விசேட பேச்சுவார்;த்தையொன்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.பாடசாலை சுற்றாடல் பகுதியை டெங்கு நுளம்பு அற்ற வலயமாக மேம்படுத்தும் முழுமையான பொறுப்பு பாடசாலை அதிபர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
சுகாதாரத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.இது தொடர்பில் நாட்டிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.டெங்கு அச்சுறுத்தல் உள்ள வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் தொடர்பில் கூடுதலான கவனஞ் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம் மற்றும் மழையுடன் கூடிய காலப்பகுதி தொடர்பில் கவனம் செலுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேம்படுத்துவது தொடர்பிலும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|