டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி எச்சரிக்கை!
Wednesday, December 20th, 2023
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2023 நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்தார்.
இன்றையதினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேசங்கள் இதில் முதல் இடங்களை பிடிக்கின்றன. மேலும், டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் இன்மையே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறலாம்.
பொதுவாக இலங்கையில் டெங்குவின் தாக்கம் ஆரம்பகாலங்களில் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


