டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, March 23rd, 2020

இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இந்த மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் டெங்கு தொற்றுடன் 17,868 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் டெங்கு தொற்று சுகாதாரத்துறைக்கு பாரிய பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 35வீத அதிக எண்ணிக்கையாகும். கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் 13 ஆயிரத்து 148 பேர் டெங்கு தொற்றுடன்கண்டறியப்பட்டனர்.

பருவப்பெயர்ச்சி காலநிலை இந்த வருடத்தில் மாற்றமடைந்தமையே இந்த அதிகரிப்புக்கான காரணமாகும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பணிப்பாளர் அநுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts:


வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொழில்நுட்பக் கல்லூரியில் கற்று வெளியேறிய மாணவர்கள் கவனயீர்ப்புப்  ப...
தொல்லியல் திணைக்களம்: சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை – ஜனாதிபதி!
டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம் - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலா...