டெங்கு நோயாளர்கள் தொகை இலட்சத்தை தாண்டியது!
Friday, July 21st, 2017
நாட்டில் டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள நோயளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் டெங்கு தொற்று காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்றாம் கட்ட டெங்கு நோய் ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்கீழ் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது - கோட்டாபய ராஜபக்ஸ!
தண்டப் பணத்தை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் மீண்டும் நீடிப்பு - தபால் திணைக்களம் !
வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள் - பொதுமக்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை!
|
|
|


