டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் BTI பாக்டீரியா வெற்றி பெறவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தகவல்!
Sunday, November 21st, 2021
BTI பாக்டீரியா (பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் இஸ்ரேல்) டெங்கு தடுப்புக்கான வெற்றிகரமான முறையல்ல என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பருவ மழை மற்றும் அதனைத் தொடர்ந்து நுளம்புகள் பரவி வருகின்ற போதிலும் டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை எனவும் அவர் இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் BTI பாக்டீரியா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா, அல்லது அதனை குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்ததா எனவும் குமாரசிறி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் கொள்முதல் விடயங்கள் ஏதேனும் இருந்தால், சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து வெளியிடப்படும் என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பதிலளித்தார்.
BTI பாக்டீரியா டெங்கு தடுப்புக்கான ஒரு வெற்றிகரமான முறையல்ல என்றும் அவர் இதன் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


