டெங்கு ஒழிப்பு தொடர்பில் மற்றுமொரு புதிய வேலைத்திட்டம் : ஜனாதிபதி!

Wednesday, February 1st, 2017

 

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக தற்போதுள்ள வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் அடுத்தவாரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய பல் போதனா வைத்தியசாலையை திறந்துவைக்கும்  நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் தொடர்பில் அனைத்து தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலவச சுகாதார சேவை தொடர்ந்தும் வலுவூட்டப்படும். நுவரெலியா, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் புதிதாக இரண்டு வைத்தியசாலைகள் அமைக்கப்பட இருக்கின்றன. இலவச சுகாதார சேவைக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சராக தாம் பணியாற்றிய போது ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தி அடைந்து திறந்து வைக்கப்படுகின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Cj4IeO0WgAA3Ivb

Related posts: