டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திர போட்டிப்பரீட்சை!
Wednesday, April 18th, 2018
டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதி பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையளர் ஜகத்சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
புதிய முறையானது மே மாதம் முதல் அமுலாக்கப்படும் எனவும் பரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடன் இந்த முறையை அறிமுகம்செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முறையின் கீழ் ஒரு நிலையத்தில் 50 பரீட்சார்த்திகள் ஒரே தடவையில் தோற்றக் கூடியவாறும் முதற்கட்டமாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் வேரஹர நிலையத்தில்டிஜிட்டல் முறையில் பரீட்சை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனி உப்பு எண்ணெய் போன்றவற்றுக்கு வரி - சுகாதார அமைச்சர்!
அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டை- அமைச்சர் ராஜித!
அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
|
|
|


