டிஜிட்டல் முறைமைக்கமையானது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் – சேவையை பெற நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்து!
Monday, March 4th, 2024
இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக தானியங்கி தொலைபேசி எண் மற்றும் இணையதளம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் சேவையை சரியான முறையில் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


