டிசம்பரில் மற்றுமொரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யு.டீ குலத்திலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் அமுலாகியிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றமை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்காமை என்பன காரணமாக இந்நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

அதேநேரம் பெரும்பாலானவர்கள் கொரோனா பரிசோதனைகளைச் செய்துக்கொள்வதனை நிராகரித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக குறித்த எச்சரிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: