டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யின் முயற்சியால் வடக்கில் அறிமுகமாகிறது தளக்கட்டு பந்தாட்டம் : பயிற்றுவிப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தன் டி சில்வா!
Tuesday, October 23rd, 2018
தளக்கட்டு பந்தாட்டத்தை வடக்குக்கு கொண்டு வருவதற்கு பெரும்பங்காற்றியவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ டக்ளஸ் தேவானந்த அவர்களே . அவரது முயற்சியின் பயனாகவே வடக்கில் 600 மாணவர்களுக்கு தளக்கட்டு பந்தாட்டத்தின் (bass ball) அடிப்படை பயிற்சியினை வழங்கியிருக்கின்றோம். இவ்வாறு தளக்கட்டு பந்தாட்டத்தின் பயிற்றுவிப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தன் டி சில்வா தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சியில் 250 மாணவர்களுக்கு தாளக்கட்டு பந்தாட்டத்தின் அடிப்படை பயிற்சிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போது குறித்த நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தென்னிலங்கை மாணவர்கள் விளையாட்டுத்துறையில் மிளிர்வது போலே எமது வடக்கு மாணவர்களும் திகழ வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அக்கறையுடன் செயற்படுபவர். முழுமையான அவரின் ஒத்துழைப்புடனே இன்று இந்த பயிற்சிகள் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 350 மாணவர்களுக்கு நேற்றைய தினத்திலும் இன்று கிளிநொச்சியில் 250 மாணவர்களுக்கும் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த சிந்தன் டி சில்வா மேலும் கூறுகையில் 1985ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தளக்கட்டு பந்தாட்டம் (Bass Ball)வடக்கு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
மாணவர்களின் உடல் உள விருத்திக்கு பெரிதும் பங்காற்றக்கூடிய இந்த தளக்கட்டு பந்தாட்டத்தை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவே இந்த செயற்றிட்டம் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வலையத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளை சேர்ந்த 250 மாணவர்கள் இன்று இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான செயற்றிட்டங்கள் ஊடாக நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முடியும் என நம்புவதாகவும் ஒருங்கிணைப்பாளர் சிந்தன் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.





Related posts:
|
|
|


