டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் யாவும் நிச்சயம் வரலாற்றில் பதிவிடுப்படும் –  வை.தவநாதன்

Monday, October 16th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் அனைத்தம் நிச்சயம் வரலாற்றில் பதியப்பட்டதாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னைய அரசில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பங்கெடுத்திருந்த காலப்பகுதியில் நாம் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தபோது பல சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்திருந்தோம்.

கணிசமான அளவு அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தாலும் அவை யாவும் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி நெறிப்படுத்தலின் கிழேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கென அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தையும் விவசாயப் பீடத்தையும் மீண்டும் கிளிநொச்சியில் இயங்க வைப்பதிலும் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அத்துடன் இந்த கைங்கரியத்துக்காக வேறு எவரும் உரிமைகோரவும் முடியாது.

இவ்வாறாக மக்களுக்கான பணிகளை என்ன இடர்பாடுகள் நெருக்கடிகள் வந்தாலும் கட்சியின் செயலாளர் நாயகத்தின் தலைமை வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுப்பதற்கு நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தவநாதன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் லிங்கேஸ் ஆகியோர், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !
முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதியிடம் இலங்கைக்கான புதய வியட்னாம் தூ...
சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணத...

பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலி வியஜம் - தற்போதைய நிலைமைகள் குறித்தும் பரிசுத்த பாப்பரசர...
பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் ...
யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்திவைப...