ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கக் கூடாது – கரைச்சிப் பிரதேச சபை!

Tuesday, October 9th, 2018

கிளிநொச்சியில் உணவகம், மருந்தகம், ரயர் ஒட்டும் கடைகள் தவிர்ந்த சகல வர்த்தக நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறையளிக்க வேண்டும் என்று கரைச்சிப் பிரதேச சபை வர்த்தக நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

கிளிநொச்சி நகரப்பகுதிகளில் 02க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்கள் இயங்கி வருகிறன. கிளிநொச்சி வர்த்தக சங்கம், சேவைச் சந்தை வர்த்தக சங்கம், பரந்தன் வர்த்தக சங்கம் என்பன கிளிநொச்சி நகரை மையப்படுத்தி இயங்கி வருகிறன.

2000 க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் இந்தச் சங்கத்திலேயே உறுப்புரிமை வகிக்கின்றன. தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவதில்லை, சில வர்த்தக நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருள்களின் இருப்பை மதிப்பீடு செய்வதாக தெரிவித்து ஒற்றைக் கதவுகளில் வர்த்தக நிலையங்களைத் திறக்கின்றன, வர்த்தக நிலையங்களில் இருப்பை மதிப்பீடு செய்வதற்காகப் பெண் பணியாளர்களை பயன்படுத்துகின்றன என்பன போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றும் இவை முறைகேடானவை என்றும் சமூக ஆர்வலர்களும், வர்த்தகப் பிரதிநிதிகளும் சபைக்குச் சுட்டிக்காட்டி யிருக்கின்றனர்.

ஆகவே ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வர்த்தக நிலையத்தைத் திறப்பதாக இருந்தால் திருத்த வேலைக்காகவோ அன்றி இருப்பை மதிப்பீடு செய்வதற்காகவோ வேறு வியாபார நோக்கத்துக்காகவோ வர்த்தக நிலையத்தைத் திறப்பதாகவோ இருந்தால், வர்த்தக சங்கத்தின் அல்லது பிரதேச சபையின் முன் அனுமதி பெறப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இது வர்த்தக சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related posts:


கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை...
அபாய நிலை முற்றாக நீங்கிவிடவில்லை - தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது - ...
இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!