ஜ.எஸ் தீவிரவாதளால் இலங்கைப் பொருளாதாரத்தில் ஆபத்து ?
Sunday, March 6th, 2016
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கடன்கள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக இந்த குழு கொழும்புக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தின் நிலுவைக் கடன் 8,475 பில்லியன் ரூபாவாக இருந்ததாக அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது மொத்தத்தேசிய உற்பத்தியில் 74.9 சதவீதம் என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.கடந்த அரசாங்கத்தில் குறிப்பாக 2006ஆம் ஆண்டுக்கு பின்னரான காலங்களில் கடன்கள் அதிகரித்துள்ளது என்றும் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான கடன் தேவைகளை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்ய முன்வந்திருப்பதாகவும் ஆனாலும் புதிய அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அறிந்து நிலைமைகளை அவதானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்புக்கு செல்வதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சீனாவில் தற்போது எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அமெரிக்க வங்கிகளின் வட்டிவீத அதிகரிப்புகளும்; பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் ஜபிசி தமிழ் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் இருந்து தேயிலையை கொள்வனவு செய்யும் நாடுகள் மீதான ஜ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதால்களும் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனைகளை விதிக்கும் என்றும் குறிப்பாக மக்களை மீள குடியமா்த்தல் மற்றும் நிரந்த அரசியல் தீா்வு உள்ளிட்ட இன நெருக்கடிக்கான தீா்வுகளை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என சா்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|
|


