ஜூலை 20 ஆம் திகதிவரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!
Friday, June 17th, 2022
2022 ஜூலை 20 ஆம் திகதிவரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளாந்தம் விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்ப எண்ணிக்கை அதிகபட்ச வரம்பை மீறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதிமுதல் மீண்டும் ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 2,500 ஆக உள்ளதாகவும் ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச ஊழியர்களுக்கான புதிய கட்டுப்பாடு அமுல்!
ஹயஸ் மதிலுடன் மோதி விபத்து: சாரதி பலி!
வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு!
|
|
|


