ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

பருவபெயர்ச்சி மழை ஆரம்பவமாவதையிட்டு ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டில் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் தற்சமயம் நிலவும் நெருக்கடியினால் இம்முறை சுகாதார அதிகாரிகளால் நேரடியாக உரிய இடங்களுக்குச் சென்று கண்காணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Related posts:
பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி விடுக்கப்பட்டுள்ளது!
பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது தொடர்பில் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை!
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவ...
|
|