ஜூன்முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.

அவ்வாறு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், சட்டத்தின் பிரகாரம் குறித்த நபர்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனா சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புச் செய்யும் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் – மேதின செய்திய...
இறுதி நாட்களிலேயே நாட்டை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் - இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் ...
நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் - நிதி இராஜ...

வெள்ளிக்கிழமைமுதல் நாளாந்தம் சில மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் - இலங்கை மின்சார சபையின் ஏற்பட்...
தேவாலயத்தில் கைக்குண்டு எடுக்கப்பட்ட விவகாரம் - உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்ற...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம் - பங்கேற்க போவதில்லை என தம...