ஜீ.எல்.பீரிஸிடம் குற்றப் புலனாய்வு விசாரணை!
Saturday, April 2nd, 2016
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ். சாவகச்சேரி, மறவன்புலோ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைக்கு பாவிக்கும் ஜக்கெட் மற்றும் 4 கிளைமோர் உட்பட 100 துப்பாக்கி ரவைகள் சாவகச்சேரிப் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெள்ளவத்தைப் பிரதேசத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related posts:
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பூம்புகார் பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிகள் வழங்கிவைப்பு...
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான தகவல்!
கிளிநொச்சியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெறச் சென்ற மாணவி அரச பேருந்து மோதிப் பலி – மற்றுமொரு மாணவி...
|
|
|


