ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் பிரசெல்ஸில் இன்று  முக்கிய பேச்சு!

Wednesday, May 11th, 2016

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் முகமாக இன்று புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை (ஜி.எஸ்.பி. பிளஸ்) நீக்கப்பட்டது.

இதனால் இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதிச் செய்ய முடியாது போனது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை நீக்கப்பட்டமையால் பல்வேறு அந்நிய முதலீடுகளும் இல்லாமல் போனமை மாத்திரமின்றி, இலங்கையின் தொழிற்சாலைகளை நடத்திவந்த பல நாடுகள் அதனை மூடிச் சென்றன.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இல்லாமல் போனமையால் பாரிய பொருளாதார நெருகடியை இலங்கை சந்தித்துவருகின்றது. அண்மையில் ஐரோப்பாவுக்கான மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டது. இதனால், மீண்டும் மீன்களை ஏற்றுமதிச் செய்யும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்க மீண்டும் வழங்கும்படி பல கட்டப் பேச்சுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் அரசாங்கம் அண்மைய காலமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இன்றையதினம் முக்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் முக்கிய கலந்துரையாடலை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இதற்காக கொழும்பிலிருந்து உயர்மட்டக் குழுவொன்று பிரசெல்ஸை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

Related posts:

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் 2 பிரதான கட்சிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் கோட்டாபயவுடன் புரிந்து...
ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி - சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்ச...
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - விவசாய அமைச்சு...