ஜவுளி துணி இறக்குமதிக்கும் வருகின்றது இறக்குமதி தடை – அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவிப்பு!
Friday, April 9th, 2021
இலங்கைக்கு ஜவுளி துணி இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளதாக பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தத் தடை வர்த்தமானியில் இருந்து நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அனைத்து ஜவுளி துணிகள் மற்றும் அச்சிடப்பட்ட பற்றிக் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தடை மூலம் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று அமைச்சர் ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக மஞ்சள், வாசனைத்திரவியங்கள் மற்றும் பாம் ஓயில் என்பவற்றுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!
சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பு உதவி!
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்க வருகின்றது தடை - அமைச்சரவை அனுமதி!
|
|
|


