ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கைக்கான விஜயத்தை ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கொனோ மேற்கொண்டு இன்று இலங்கை வரகைதரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைக்கான பயணமொன்று 15 வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்றது.
மேற்படி பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
ஜப்பானானது இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளர்களில் ஒன்றாக விளங்குகின்றதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
சாதாரணப் பரீட்சை நாளை ஆரம்பம்!
தென்மராட்சியில் டெங்குத் தாக்கம் குறைவு - சுகாதாரத் திணைக்களம்!
எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!
|
|