ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் – கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!
Saturday, July 22nd, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்துள்ளனர். இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இச் சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பில் முதல் கடற்படை பாதுகாப்பு பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் யொஷிஹிரோ கோகா, ‘இசுமோ’ மற்றும் ‘சசனமி’ கப்பல்களில் கட்டளை அதிகாரிகளான கேப்டன் யொஷிஹிரோ கய், கொமான்டர் ஹிரோடகா ஒகுமுரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related posts:
சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை!
அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர...
|
|
|


