ஜனாதிபதி விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள்!
Wednesday, April 8th, 2020
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையிலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் நேற்று இடம்பெற்றது.
அதில் சுகாதார துறை சம்பந்தமான பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் –
1. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்டில் உள்ள சகல மருந்தகங்களும் திறக்கப்பட வேண்டும்.
2. சகல ஆயர்வேத மருந்தகங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும் திறக்கப்பட வேண்டும்.
3. சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது நடமாடும் சேவையை முன்னெடுக்கவும் அனுமதியளித்தல்.
4. கொத்தமல்லி, இஞ்சி மற்றும் வெனிவெல்கட்டையை இறக்குமதி செய்தல்.
5. ஆயூர்வேத சிகிச்சையை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகளை அஞ்சல் மூலம் பெற வழியேற்படுத்தி கொடுத்தல் என்பனவாகும்.
Related posts:
|
|
|


