ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்க ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு!
Sunday, September 25th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்ஷோ அபே கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏனைய கடன் வழங்குநர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்க ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக முன்னதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


