ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரி இடையில் சுவிட்சர்லாந்தில் விசேட சந்திப்பு!
Thursday, January 18th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது” நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கை வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியலில் தமிழ் மக்கள் எப்போது விழிப்படைகின்றார்களோ அன்றுதான் உரிமைகளை வெற்றெடுத்த இனமாக தலைநிமிர மு...
பெண்கள் ஆபாசமாக இருந்தாலும் ஆண்கள் நாகரீகமாக இருக்கவேண்டும் - குமார் சங்கக்கார!
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி சபைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - தேர்தல்கள் ஆணைக்கு...
|
|
|


