ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபர்கள் சந்திப்பு!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் அனைவரையும் இன்று(26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களையும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!
திங்கள்முதல் லிற்றோ எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் - அதுவரை வரிசையில் நிற்க வேண்டாம் என லிற்...
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
|
|