ஜனாதிபதி – பிரதமர் பதவிகளில் எந்தவித மாற்றமும் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, March 1st, 2023
தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எந்த எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில், அதனை திசை திருப்புவதற்கு இவ்வாறான விடயங்களை கூறுவது நியாயமானது அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
போத்தல் நீரின் தரம் தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!
மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு ஆரம்பம் !
குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானம் - நிதி இராஜா...
|
|
|


