ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !
Thursday, May 9th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் கையொப்பதுடன் வெளியிட்டுள்ள குறித்த அறிவிப்பில்,
இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு உட்பட்டது.
அதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 16 ஆம் திகதிக்கு இடையில் கோரப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அச்சுறுத்தல்கள் தொடர்கிறது - ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்!
இலங்கை அமைச்சரவை முடிவை வரவேற்கத்தக்கது - சீன நிறுவனம்!
மருத்துவ அதிகாரிகள், பொதுச் சேவை பணியாளர்களின் ஓய்வூதிய வயதெல்லை 63ஆக நீடிப்பு!
|
|
|


