ஜனாதிபதி தலையீடு – வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை – ஒரு சில மணி நேரத்தில் முடிவு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
Thursday, September 16th, 2021
ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறு தங்கவைக்கப்படும் விடுதிகளில் அதிக கட்டணம் அறவிடும் மோசடியான செயற்பாடு தொடர்பில் செய்திகள் வெளியிகியிருந்தன..
குறித்த தனிமைப்படுத்தல் விடுதிகளில் இடம்பெறும் இவ்வாறான மோசடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு சில மணித்தியாலங்களுக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிழப்பிடத்தக்கது.
0000
Related posts:
|
|
|


