ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்த்து தெரிவிப்பு!
Tuesday, November 24th, 2020
ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார.
கடந்த ஓராண்டு காலத்தில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் புதிய நிலையில் விரிவடைந்துள்ளதாக தமது விசேட வாழ்த்துச் செய்தியில் மோடி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலானதொடர்புகளை மேலும் பலப்படுத்த இந்தியா எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திங்களுக்கும், கொரோனா தடுப்பு பணிகளுக்கும் இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின்கீழ், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் உயர் தன்மையை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


