ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் பயணம் !
Saturday, June 17th, 2023ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தினூடாக இன்று அதிகாலை ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
துபாய்க்கு சென்று அங்கிருந்து, மற்றொரு விமானத்தின் ஊடாக பிரித்தானியா நோக்கி ஜனாதிபதி பயணிக்கவுள்ளார்.
பிரான்ஸுக்கான விஜயத்தின் போது, புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
30,000 இலங்கையருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் பிரதமர் தினேஷ் குணவர்தன!
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்காது - ஜனாதிபதியின்...
|
|