ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்து!
Sunday, April 28th, 2024
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரித்துள்ள ஜனாதிபதி செயலகம் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், இவ்வாறான நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத் என்ற அதிகாரியை +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி – மீசாலையில் சம்பவம்!
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ...
பொருளாதார நெருக்கடி - மந்த நிலையில் பண்டிகைக்கால வியாபாரம் – வியாபாரிகள் கவலை!
|
|
|
கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி த...
காசோலை கொடுக்கல் வாங்கல் மோசடி தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் - நீதி அமைச்சர் விஜயதாசவினால் ...
பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் - வடக்கு மாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் தெ...


