ஜனாதிபதி அறிவுறுத்து – மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!
Thursday, May 27th, 2021
காலி, மாத்தறை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கி இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி சினோஃபாம் தடுப்பூசிகளை உடனடியாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த தடுப்பூசி தொகை சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளித்து நாட்டின் சில மாவட்டங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !
கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக...
வேகமாக பரவி வரும் 'சதை உண்ணும் பக்டீரியா' - அறிகுறிகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
|
|
|


