ஜனாதிபதி அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச!
Saturday, April 21st, 2018
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கு மாறாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை உருவாக்குவது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுயநல அரசியலுக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு பதிலாக, நிறைவேற்று பிரதமர் முறைமையை கொண்டு வர முனைகின்றனர்.
இது முழுநாட்டையும் சீரழிக்கும்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதுடன், ஜனாதிபதியின் சில அதிகாரங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.
Related posts:
உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தகவல்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் நுகர்வோர் அதிகாரசபை வர்...
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு முறைமை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு புதிய ...
குமுதினிக்கு சமநிலை பரிசோதனை!
|
|
|


