ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது 10 பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்தநிலையில் மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே இவ்வாறு பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க யோசனை - தலைமை தொற்று நோயியல்...
20 ஆம் திகதி புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த புனித பூமிக்கு இலங்கையிலிருந்து முதல் விமானம்!
பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது - மத்திய வங்கி ஆளுநர...
|
|