ஜனாதிபதித் தேர்தல் – விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிப்பு!
Monday, September 9th, 2024
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி 8ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டது.
எனினும், வாக்குச் சீட்டு விநியோகம் வரும் 14ஆம் திகதியும் நடைபெறும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பூநகரி வேரவில் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நூல்கள் வழங்கிவைப்பு!
இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடையாக வழங்குகின்றது அவுஸ்திரேலியா!
23,000 ஊழியர்களின் வினைத்திறனில் பல பிரச்சினைகள் - செலவீனங்களை பார்க்கும்போது பெரும் சுமையாக உள்ளது ...
|
|
|


