ஜனாதிபதித் தேர்தல் : நாளை நள்ளிரவுடன் பிரசாரங்களும் நிறைவுக்கு – மஹிந்த தேஷப்பிரிய!

Tuesday, November 12th, 2019

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

13 ஆம் திகதிக்கு பின்னரும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டால் சட்ட ஆலோசனைக்கு அமைய அதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதி பிரசாரக் கூட்டங்களின் செய்திகள் எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒரு செய்தியை மாத்திரமே உள்ளடக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

ஜனாதிபதி முறைமை, அரசியலமைப்பு மாற்றம் குறித்து கிராமங்கள்தோறும் சென்று கலந்துரையாடல்கள் - காமினி வி...
நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவ...
சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது - இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்க...