ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்றுமுதல் வீடுகளுக்கு விநியோகம்!
Tuesday, September 3rd, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
இதன்படி, 25 மாவட்டங்களிலுள்ள தேர்தல் அலுவலகங்களின் ஊடாக வாக்காளர் அட்டைகளை அஞ்சலிட, கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை !
புகைத்தலில் வீழ்ச்சி - சிகரட்டுகளின் விலை அதிகரிப்பு!
கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் இடம்பெறுமா? கிளிநொச்சி ஆனைவிழுந்தான் மக்கள் ஆத...
|
|
|


