ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 17th, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகள் குறித்த விபரங்கள் கிடைத்தவுடன், வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட ஏராளமான வாக்குப்பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை அரசு தொழிற்சாலைக்கு அனுப்பி சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலை இலக்காகக் கொண்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவித்த ரத்நாயக்க,  அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: