ஜனவரி 17 இல் 2023 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்!
Tuesday, December 6th, 2022
2023 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் 8ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகள் தொடர்பான 12 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடபகுதிவீடமைப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் மறுப்பு!
ஜூன் 3ஆம் திகதி யாழின் பல பகுதிகளிலும் மின் தடை ஏற்படவுள்ளது!
துணைநில் வைப்பு - கடன் வசதி வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்!
|
|
|


