ஜனவரி முதல் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 கோடி ரூபா அபராதமாக வசூலிப்பு – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!
Friday, November 24th, 2023
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 24 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்க முடிந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
22,000 சோதனைகளில் 3,151 அரிசி தொடர்பான சோதனைகளும் 510 சீனி தொடர்பான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் கொள்வனவு செய்யும் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் சோதனைகள் மற்றும் விசாரணைகளை தீவிரப்படுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோர் முறைப்பாடுகள் தொடர்பான தகவல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தொலைபேசி இலக்கமான 1977 க்கு வழங்குமாறும் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது அஞ்சலோ மெத்தியூஸ் வசம்!
சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே!
அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் மின்விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது - மின்சக்...
|
|
|


